9/23/2014

சகல சௌபாக்கியங்களும் அருள்பவளே !


நாடும் மக்களும் நலன் பெறவே சுகம்
தேடும் விழிகளைக் காத்தருள்வாய்
பீடும் பெருக்கிப் புவி மேலே எந்நாளும்
கூடும் மகிழக் குடி புகுவாய் !

வாடும் உலகின் வாட்டம் தீர்பவளே!
காடும் சிறக்கக் கைகொடுப்பாய் விழி
மூடும் போதும் உன்னாமம்
சூடும் மனத்தில் சுடர்ந்திடுவாய் !

பாடும் குயிகளும்  பாடி மகிழ்ந்தட
பாட்டாய் என்றும் நீ வருவாய்
ஓடும் நதிகளும் உன்பேர் சொல்லிட
ஓங்கும் நல்வளம் தந்தருள்வாய் .!

ஆடும் அசையும் உயிர்களெல்லாம்
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே எந்நாளும்
போடும் தாளம் தப்பாமல்- புவிமேல்
புலரும் புன்மையைப் புடைத்தெறிவாய் !

ஈடு இணைகள் அற்றவளே 
இனிக்கும் தேனாய் நிற்பவளே 
மேடு பள்ளம் அறிந்திங்கே 
மேன்மையுறவும் செய்திடுவாய் !

கேடு வந்து விளையாமல் 
கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய் 
வீடும் சிறக்க வந்தவளே! 
வீசுக  தென்றலாய் எம்முள்ளே ..

                                                   
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. அம்பாள் அருள் பெற்று இந்த உலகம் மேன்மையடையட்டும்..
    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  2. கேடு வந்து விளையாமல்
    கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய்
    வீடும் சிறக்க வந்தவளே!
    வீசுக தென்றலாய் எம்முள்ளே .

    பாடும் குயிலும் நான்தானே
    பாட்டின் இனிமைத் தேன்தானே.
    ஓடும் ஆற்றால் வளந்தானே
    உயர்ந்திட நாடும் நலந்தானே!

    ReplyDelete
  3. நல்ல கவி(தை) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நவராத்திரி தினத்தை முன்னிட்டு சிறப்பு கவிதையா? அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வீடும் சிறக்க வந்தவளே!
    வீசுக தென்றலாய் எம்முள்ளே ..//

    அனைவர் வாழ்விலும் வீசுதென்றலாய் வரட்டும்.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.
    த,ம 2

    ReplyDelete
  6. அருமை சகோதரி

    ReplyDelete
  7. நவராத்திரி சிறப்புக் கவிதை அருமை

    ReplyDelete
  8. கேடு வந்து விளையாமல்
    கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய்
    வீடும் சிறக்க வந்தவளே!
    வீசுக தென்றலாய் எம்முள்ளே ..

    வசீகரமான வரிகள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நவராத்திரிச் சிறப்புக் கவிதை அருமை!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. கேடு வந்து விளையாமல்
    கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய்
    வீடும் சிறக்க வந்தவளே!
    வீசுக தென்றலாய் எம்முள்ளே .
    அருமை அருமை தோழி! அருமையான வேண்டுதலும் தோழி ! தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  11. நவராத்திரிக்கான கவியோ! நவராத்திரியை சிறப்பித்து விட்டீர்களே சகோதரி தங்கல் கவியால்!!!!

    கேடு வந்து விளையாமல்
    கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய்
    வீடும் சிறக்க வந்தவளே!
    வீசுக தென்றலாய் எம்முள்ளே ..//

    வாழ்த்துக்கள்! நவாராத்திரி வாழ்த்துக்கள்! தேவி உலகைக் காக்கட்டும்!

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை....

    அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........