11/26/2014

கனவு சிதைந்ததா?... காற்றில் பறந்ததா? ....

கனவு சிதைந்ததா?...
காற்றில் பறந்ததா? ....
கணித மேதையே சொல்லடா -உன்றன்
கணக்குத் தப்பெனக் கொள்ளடா ...

விழியில் ஈரம் காய்ந்து போகுமா? -எங்கள்
விடுதலை தாகம் ஓய்ந்து போகுமா ?...
இடிந்து போனது போதுமடா ..
இருகரம் கூப்பினோம் வாருமடா...

 மரணத்தை நேசிக்கும் மாவீரர்  உள்ளத்தில்
மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
இலட்சியம் வென்றிட  எமக்கும்  தான்
இங்கொரு இடை வெளி தேவையடா ...

பறவைக்கும் சொந்தமாய்க்  கூடுண்டு
அன்பைப் பகிர்ந்திட என்றுமே தாயுண்டு
எமக்கிங்கே உலகினில்  என்னவுண்டு ?...அட
எறிகணை தரும் வலி தான் உண்டு ....

எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்
இலட்சிய வேங்கைகள் சிரித்திட வேண்டும்
ஈழத்தாய் மடியினில் தூங்கிட  வேண்டும்

அகதியின் வலி இது புரிகிறதா ?.....
உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..

எடு எடு தொடு தொடு கணைகளை விடு விடு
என மனம்  இங்கு வலிக்குதடா ...
அந்த வலி தரும் ஓசையில் எதிரியின் ஆசைகள்
நிட்சயம் ஒரு நாள் வீழுமடா ....

பனி மலை உருகிடும் வேகம்
அதை விடப் பெரியது எம் தாகம்
விரைவினில் ஈழத்தை வெல்லும்
அந்த விடுதலை தாகத்தைக் கொல்லும்

                                                                (     கனவு சிதைந்ததா?...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

 1. வணக்கம்
  அம்மா.

  எம் தேச காற்றினை போற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது.... அவர்கள் எமது காவல் தெய்வங்கள்... அவர்கள் இன்றுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் பூசிக்க வேண்டியர்கள்...
  பகிர்வுக்கு நன்றி த.ம1
  எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. மரணத்தை நேசிக்கும் மாவீரர் உள்ளத்தில்
  மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
  இலட்சியம் வென்றிட எமக்கும் தான்
  இங்கொரு இடை வெளி தெவையடா ..//

  இடைவெளி குறைந்து வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.
  வீரர்களுக்கு . வணக்கங்கள்.

  ReplyDelete
 3. வீரமிகு எழுச்சி வரிகள் அம்மா...

  ReplyDelete
 4. எழுச்சி மிகு வரிகள்
  உன்னத இலட்சியங்கள் நிறைவேறியே தீரும்

  ReplyDelete
 5. //எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
  எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்!..//

  எமது வேண்டுதலும் இதுவே!..

  ReplyDelete
 6. வேதனைத் துயரினில் வெளிவந்த கவிதை! -மா
  வீரரின் உயிரது ஈழ மண்ணிலே வீழ்ந்த விதை
  சாதனைப் படைத்தவர் சாதலும் இலையே-நல்
  சரித்திரம் அவரே வாழ்வது நிலையே!

  ReplyDelete
 7. பனி மலை உருகிடும் வேகம்
  அதை விடப் பெரியது எம் தாகம் //

  தாய் மடி விரைவில் கிடைக்கட்டும்

  தம 6

  ReplyDelete
 8. மாவீரர்களைப் போர்றி வணங்கிடும் வரிகள் அருமை சகோதரி!

  அகதியின் வலி இது புரிகிறதா ?.....
  உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..//

  வேதனை மிகு வரிகள்.. தங்கள் எல்லோரது வேதனையும் விரைவில் தீர்ந்திட பிரார்த்தனைகள்! உன்னத இலட்சியம் விரைவில் நிறைவேறட்டும்

  ReplyDelete
 9. வீர வரிகள்! அருமையான எழுச்சிப் பாடல்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. மாவீரர்கள் வீழ்ந்து விடவில்லை ,விதைக்கப் பட்டிருக்கிறார்கள் !
  த ம 8

  ReplyDelete
 11. காலம் பதில் சொல்லும்... அருமைக்கவி.

  ReplyDelete

 12. வார்த்தையை மீறும் உணர்வுகளைக் கொண்ட கவிதை
  நிச்சயம் கோழைக்கும் வீரமூட்டும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. எழுத்தில் வேதனையின் வீச்சினை உணரமுடிகிறது. தொடருங்கள்.

  ReplyDelete
 14. கவிதைக்குப் பொருத்தமான தலைப்போடு ஒரு உணர்வுக் கவிதை..

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........