11/04/2014

முன் நின்று காப்பவனே !மனமென்னும் மாளிகையில் மரத்துக் கிடக்கும்
மனிதநேயம் இப்போதே விழிக்க வேண்டும் !
இனபேதம் மதபேதம் பார்த்தே நாளும்
இன்னலுறும் நிலையிங்கே மறைய  வேண்டும் !

தினந்தோறும் நற்கருமம் நிகழ வாழ்வில்
தீமைகளை இவ்வுலகம் எதிர்க்க  வேண்டும் !
வனவிலங்கு போல்வாழும் வாழ்வின் கொடுமை
வருங்கால சந்ததிக்கும் புரிய வேண்டும் !

வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
வகுத்த நீதி  அத்தனையும் முடங்க வேண்டும் !
பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
பெருமான உனதருளால் ஒழிய வேண்டும் !

அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
விரும்பாத எச்செயலும்  தீண்டா வண்ணம்
விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும் !

பிடிவாத குணம் மண்ணில் மறைய வேண்டும்
பிறர் வாழ வாழ்த்தும் எண்ணம் நிறைய வேண்டும் !
அடியோடு வெறுப்புணர்வு அகல வேண்டும்
அழகான சிந்தனைகள் பெருக வேண்டும் !

இளகாத மனமெங்கும்  இளக வேண்டும்
இரக்க குணம் அனைவருள்ளும் சிறக்க வேண்டும் !
தளராத நம்பிக்கையைத் தந்தருள வா
தர்மத்தின் திருவுருவே தரணி தனிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

 1. மனித நேயத்தை காக்கவும்
  பிடிவாத குணம் ஒழியவும்
  இளகின மனதாய் வாழவும்
  நம்பிக்கையுடன் வேண்டும் வரம் பெற்றதைப் போன்று படமே சொல்கிறதே.. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 2. வணக்கம் தோழி!

  மனித நேயம் போற்றிப் புனிதனாக வாழ
  இனிதான பாடல் இசைத்தீர்கள்! அருமை!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
  அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
  விரும்பாத எச்செயலும் தீண்டா வண்ணம்
  விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும்!//

  விடையேறியோன் என்றும் காப்பான்.
  வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு.

  ReplyDelete
 4. tham 4

  பா அருமை அருமை சகோதரியாரே.

  ReplyDelete
 5. அருமையான பாடல் தோழி.

  ReplyDelete
 6. நல்லனவெல்லாம் கேட்டுள்ளீர்கள்! விரைவில் இறையருளால் உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வணக்கம்
  அம்மா.
  இந்த கால மனிதர்கள் படிக்க வேண்டியவரிகள்.. மனித நேயம் பேற்றிட...பகிர்வுக்கு நன்றி
  த.ம-6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 8. "வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
  வகுத்த நீதி அத்தனையும் முடங்க வேண்டும்!
  பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
  பெருமான உனதருளால் ஒழிய வேண்டும்!" என
  நானும் விரும்பி வேண்டுகிறேன் இறைவா என்று என் உள்ளத்தில் தூண்டிய அடிகள் இவை!

  ReplyDelete
 9. கவிதை கண்டேன். நல்லனவே வேண்டியுள்ளீர்கள். அனைவருக்காகவும் வேண்டியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 10. அழகான சிந்தனைகள் பெருகித்தானே இருக்கின்றன,செல்லப் பேத்தி!

  ReplyDelete
 11. வரம் கேட்கும் அழகான கவிதை.

  ReplyDelete
 12. அருமையான வேண்டுகோள்.....

  பாராட்டுகள்.

  த.ம. +1

  ReplyDelete
 13. மனித நேயத்தை வலியுறுத்தி முன் வைக்கும் வேண்டுகோள் அதுவும் கவிதை வடிவில் மிக அருமை சகோதரி!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........