10/15/2013

மாங்கனிச் சாறே மனம் இனிக்குது உன்னாலே...

                                                     

மாங்கனிச் சாறே
மனம் இனிக்குது உன்னாலே
கொடுத்தவர் உள்ளம் அதுவே
கொடையில் சிறந்த வள்ளம் !!

பருகிட இன்பம் பெருகிடும் போது
பார்வையில் புதுவித சுகம் வருதே ...!!!!
இனியன கூறிப் பெருமிதத்தோடு
இனியுனை நானும் வெல்வேனே .......

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
தாளம் இனிமேல் தப்பாது ....
இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......

பெரியவர் கூறும் செய்தியைக் காண
பெருமித்தத்தோடு  வாருங்கள்
இறைவனைப் போற்றும் இனிய நற் கருத்தை
இத்தளம் சுமப்பதைக் காணுங்கள்

தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
தேடி இங்கு வாருங்கள் 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!
                                                         
http://gopu1949.blogspot.ch/2013/10/63.html
http://gopu1949.blogspot.ch/2013/10/58.html
http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html

சுவையான இம் மாங்கனிகளைச்   சுவைத்து  
மகிழ்ந்தவர்கள் இட்ட கருத்திற்குப் பரிசுப் 
பொருளும் உண்டுங்க .மாங்கனிகளைச் 
சுவைத்தவர்களுக்கு 
இந்த மாங்கனிச் சாறும் கிட்டும் :)))))))

                                                           
                                                          http://gopu1949.blogspot.ch/
                                                                       
                                                                           


மிக்க நன்றி ஐயா .சிறப்பான தங்களின் படைப்புகளை
அனைவரும் கண்டு மகிழ வாழ்த்துக்கள் .


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

21 comments:

 1. தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
  தேடி இங்கு வாருங்கள்
  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
  நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!

  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியான தேர்வு ! மிக்க நன்றி தோழி வாழ்த்திற்கும் .

   Delete
 2. நல்லது... பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. ஆஹா, கொட்டும் முரசின் படம் அருமை.

  என் வலைத்தளத்துக்கு நல்லதொரு விளம்பர அதிகாரியாக பணியேற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதில் எனக்கும் சந்தோஷமே ;).

  எல்லாமே மேங்கோ ஜூஸ் செய்த வேலைகளே !

  சென்ற ஒரு பதிவினில் ஆசையாககேட்டீர்கள்.

  அதனால் இந்தப்பதிவினில் தங்களையே விளக்கேற்றச் செய்து அதற்குப் பரிசாக மாங்கனிச்சாறினை அளித்து மகிழ்ந்தேன்.

  தங்களுக்கு அடியேனின் நன்றியோ நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. அது ஒன்றுமில்லை ஐயா தங்களின் ஆக்கங்களின் சிறப்புத் தன்மையை உணர்ந்த மனம் மகிழ்வுகொண்டது கூடவே கிட்டியமாங்கனிச் சாற்றினை அருந்தியதனாலே பாட்டுத் தன்னாலே வந்துவிட்டது :))))) யாம் பெற்ற இன்பம்
   பெறுக இவ்வையகம் முழுதும் இன்றோடு :)))))) மிக்க நன்றி ஐயா .

   Delete
  2. நீங்க சொல்வது உண்மைதாங்க... நானும் அந்த பதிவுகளைப்பற்றி தற்போதுதான் தெரிந்துக்கொண்டேன்...

   அக்காவுக்கு நல்ல மனசுதான்...

   Delete
  3. ஆஹா ......பாராட்டுக்கள் உச்சம் பெற்று நிற்கிறதே :)))
   மிக்க நன்றி சகோதரா தவறவிடாமல் ஆக்கத்தினைக் கண்டு
   களித்து மகிழ்ந்தமைக்கு .

   Delete
 4. //தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
  தாளம் இனிமேல் தப்பாது ....
  இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
  இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......//

  ஆஹா, இந்தக்கடைசி வரி ஒன்று போதுமே ;))))) குடம் குடமாக அம்பாளுக்குப் பாலாபிஷேகம் செய்வதுபோல மேங்கோ ஜூஸ் அபிஷேகம் நானும் செய்வேனே !! ;)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மாங்கனிச் சாற்றைப் பார்த்த மாத்திரத்தில் இதயம் எதை எதையோ சொல்லி மகிழும் போது அதை அப்படியே அள்ளித் தெளித்தால் அது தான் கவிதை :))))))))))))) இது "கனி தந்த கவிதை" .உங்களுக்கு எனது அன்புப் பரிசும் இதுவே .பெற்றுக் கொண்ட திருப்தியில் அள்ளி அள்ளி ஊத்துங்கள் கவிதைகளும் துள்ளித் துள்ளி ஓடி வரும் :))))))))

   Delete
 5. எப்படித்தான் உங்களால் நொடிப்பொழுதினில் ஓர் பொருத்தமான கவிதை படைத்து, படங்கள் இணைத்து, பதிவாகத்தந்திட முடிகிறதோ !!!!!!

  மிகவும் வியந்து போனேன்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே மாங்கனிச் சாற்றின் மகிமை தான் .அவை உங்கள் சிறந்த ஆக்கங்களுக்கு இணையானவை அல்லவோ? .எனக்கும் தொடர்ந்து பருகிட ஆசைதான் சந்தர்ப்பம் இடம் கொடுத்தால் நிட்சயம் இந்த வெற்றி எனக்கும் தொடர்ந்து கிட்டும் ஐயா .மிக்க நன்றி ஐயா இனிய நற் பரிசுக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 6. //டஇனியன கூறிப் பெருமிதத்தோடு
  இனியுனை நானும் வெல்வேனே //
  முரசுப் படமும் கவிதை வரிகளும் அருமையாக உள்ளன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
  2. Viya Pathy October 15, 2013 6:09 AM

   //இனியன கூறிப் பெருமிதத்தோடு
   இனியுனை நானும் வெல்வேனே //
   முரசுப் படமும் கவிதை வரிகளும் அருமையாக உள்ளன்.

   அன்புடையீர், தங்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. காண வாரீர்
   Sl. No. 62 இல் ...... http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html

   அன்புடன் VGK

   Delete
 7. கவிதையும் சிறப்பான பதிவரை சிறப்பித்தவிதமும் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 8. பொதுவாக - மா மரம் - நித்ய மங்கலங்களுள் ஒன்று. மா இலைத் தோரணம் இல்லாத விழா உண்டா?.. பூரண கும்பங்களில் மா இலையே பிரதானம்.தவிரவும் மா மரத்தின் பட்டை கொழுந்து இவை சில இயற்கை மருந்துகளில் பயன்படுகின்றன. மாதா ஊட்டாத சோற்றை மா வடு ஊட்டும். மாங்கனி முக்கனிகளில் முதலாவதானது. சிவலிங்கத்திற்கு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்வது மிகப்பெரிய பேறு தரும். இன்னும் எத்தனையோ சிறப்புகள்.. அத்தகைய மாம்பழச் சாறு அன்பு நிறைந்த நட்பினை வளர்த்திருக்கின்றது.. வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா .சிறப்பான நற் கருத்துக்களால் இன்றைய ஆக்கத்திற்குப் பெருமை சேர்த்தமைக்கு .

   Delete
 9. அருமையான பகிர்வு .நன்றி !

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........