12/29/2011

என் மூச்சுக் காற்றே உன்னை விடுவேனா!....

நட்பைக் குலைத்து நாசம் செய்து 
நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டால் இங்கு 
வேற்றுக் கிரகம் குடி வரும் வரைக்கும் 
வீழ்ந்த தமிழன் எழமலா போவான் !

இன்று பட்டுப் போனது இலையும் கிளையும் 
வேர்கள் அல்ல நாம்  உறங்க !
அன்னை கற்றுத் தந்த மொழியின் வலிமை 
மூச்சுக் காற்றாய் மாறும் உயிர் கொடுக்க!

ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
பத்து யானைகள் பின்வாங்கும் இதில் 
கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும் 
கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!

இனியும் வட்டி குட்டி போட்டுச் சந்தம் 
எட்டுத் திக்கும் பரவி வரும் இந்த 
வண்ண நதியைக் கண்டு மிரளும் நரிகள்  
அதில் குட்டிக்கரணம் போட்டு மடியும்!

தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும் 
தன்னம்பிக்கையை இழப்பதில்லை அதுபோல் 
முத்து முத்தாய்க் கவிதை வடித்தவர் 
முடங்கிக் கிடக்க நினைப்பதில்லை!

கொட்டும் மழையின் பயனை நோக்கி 
முகில்கள் என்றும் திரள்வதில்லை !
நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும் 
வீணாய்ப் போகப் போவதில்லை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

25 comments:

 1. இன்று பட்டுப் போனது இலையும் கிளையும்
  வேர்கள் அல்ல நாம் உறங்க
  அன்னை கற்றுத் தந்த மொழியின் வலிமை
  மூச்சுக் காற்றாய் மாறும் உயிர் கொடுக்க..

  நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும்
  வீணாய்ப் போகப் போவதில்லை!

  அருமை.புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 2. ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!..

  ஆஹா.. அடங்காத தமிழின் சீற்றம் என்ன அழகாய் கர்ஜிக்கிறது

  ReplyDelete
 3. கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும் கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்! உண்மைதான். நினைத்தாலே பெருமிதம் தரும் நம் அமுதத் தாய்மொழிக்கு நிகர் ஏது? தமிழின் பாய்ச்சலும் சீற்றமும் மனதைக் கொள்ளை கொண்டது!

  ReplyDelete
 4. முத்துமுத்தாய் கோர்க்கப்பட்ட சொல் மாலை.
  தங்கத்தமிழ்த் தாய்க்கு நீங்கள் அணிவித்த மற்றொரு
  பொன்னாரம்.
  அருமை சகோதரி.

  ReplyDelete
 5. //தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும்
  தன்னம்பிக்கையை இழப்பதில்லை //
  இதுதாங்க சூப்பர்.

  ReplyDelete
 6. ரசனையான கவிதை ஒவ்வொரு வரிகளுமே அழகு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ////கொட்டும் மழையின் பயனை நோக்கி
  முகில்கள் என்றும் திரள்வதில்லை
  நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும்
  வீணாய்ப் போகப் போவதில்லை!.............////

  சரியாகச் சொன்னீங்க சிறந்த கவிதை வரிகள் என்றும் சிறப்பாக இருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 8. ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!...//

  தமிழ் சிங்கத்தின் கர்ஜனை வீரமாக தெரிகிறது எழுத்தில்....!!!

  ReplyDelete
 9. அம்பாள்...உங்கள் மனதின் வேகம் வேண்டும் அத்தனை தமிழருக்குமே.வார்த்தைகளின் வீச்சு
  அதிரடி !

  ReplyDelete
 10. >>ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!..

  sema

  ReplyDelete
 11. தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும்
  தன்னம்பிக்கையை இழப்பதில்லை அதுபோல்
  முத்து முத்தாய்க் கவிதை வடித்தவர்
  முடங்கிக் கிடக்க நினைப்பதில்லை!..//...

  அருமை அருமை
  எழுச்சியூட்டிப் போகும் அருமையான வரிகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. இன்று பட்டுப் போனது இலையும் கிளையும்
  வேர்கள் அல்ல நாம் உறங்க
  அன்னை கற்றுத் தந்த மொழியின் வலிமை
  மூச்சுக் காற்றாய் மாறும் உயிர் கொடுக்க..

  நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும்
  வீணாய்ப் போகப் போவதில்லை!

  அருமை.புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  மிக்க நன்றி தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும்
  எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 13. ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!..

  ஆஹா.. அடங்காத தமிழின் சீற்றம் என்ன அழகாய் கர்ஜிக்கிறது

  மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .

  ReplyDelete
 14. கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும் கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்! உண்மைதான். நினைத்தாலே பெருமிதம் தரும் நம் அமுதத் தாய்மொழிக்கு நிகர் ஏது? தமிழின் பாய்ச்சலும் சீற்றமும் மனதைக் கொள்ளை கொண்டது!

  மிக்க நன்றி ஐயா .படைப்பாளிகளுக்கு சோர்வு என்பதே ஏற்படக்கூடாது
  என்பதே இந்தக் கவிதையின் நோக்கம் .

  ReplyDelete
 15. முத்துமுத்தாய் கோர்க்கப்பட்ட சொல் மாலை.
  தங்கத்தமிழ்த் தாய்க்கு நீங்கள் அணிவித்த மற்றொரு
  பொன்னாரம்.
  அருமை சகோதரி.

  மிக்க நன்றி சகோதரரே .தங்கள் பாராட்டும் ஊக்குவிப்பும்
  எம் போன்றவருக்கு மென்மேலும் சிறந்த ஆக்கங்கள் படைக்க
  உறுதுணையாக இருப்பதை நான் நன்கு அறிவேன்.நன்றி சகோ .

  ReplyDelete
 16. //தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும்
  தன்னம்பிக்கையை இழப்பதில்லை //
  இதுதாங்க சூப்பர்.

  மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .

  ReplyDelete
 17. ரசனையான கவிதை ஒவ்வொரு வரிகளுமே அழகு. வாழ்த்துகள்.

  மிக்க நன்றி அம்மா வரவுக்கும் வாழ்த்துக்கும் .

  ReplyDelete
 18. ////கொட்டும் மழையின் பயனை நோக்கி
  முகில்கள் என்றும் திரள்வதில்லை
  நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும்
  வீணாய்ப் போகப் போவதில்லை!.............////

  சரியாகச் சொன்னீங்க சிறந்த கவிதை வரிகள் என்றும் சிறப்பாக இருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் அக்கா

  நன்றி சகோ .நாம் சிறந்த கவிதைகளை எழுதிப் பிறரை மகிழ வைக்க நினைக்கின்றோம் .எங்கள் கடமை எதுவோ அதில் நின்று எந்தக்
  காரணத்திற்காகவும் நாம் விலகிவிடக்கூடாது .இன்று எழுதிய
  ஆக்கம் என்றோ ஓர் நாள் மதிக்கப்படும் .இந்த உணர்வு எமக்கு
  அவசியம் என்பதை இங்கு வலியுறுத்தியுள்ளேன் .

  ReplyDelete
 19. ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!...//

  தமிழ் சிங்கத்தின் கர்ஜனை வீரமாக தெரிகிறது எழுத்தில்....!!!

  மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் .

  ReplyDelete
 20. அம்பாள்...உங்கள் மனதின் வேகம் வேண்டும் அத்தனை தமிழருக்குமே.வார்த்தைகளின் வீச்சு
  அதிரடி !

  கவிதை எழுதுவதில் எனக்கு உள்ள ஆர்வமே இந்த வேகத்துக்கும் காரணம் சகோ .மிக்க நன்றி வரவுக்கும் கருத்திற்கும் .

  ReplyDelete
 21. >>ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
  பத்து யானைகள் பின்வாங்கும் இதில்
  கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
  கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!..

  sema

  மிக்க நன்றி சார் வரவுக்கும் கருத்துக்கும் .

  ReplyDelete
 22. தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும்
  தன்னம்பிக்கையை இழப்பதில்லை அதுபோல்
  முத்து முத்தாய்க் கவிதை வடித்தவர்
  முடங்கிக் கிடக்க நினைப்பதில்லை!..//...

  அருமை அருமை
  எழுச்சியூட்டிப் போகும் அருமையான வரிகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்துக்கும் .

  ReplyDelete
 23. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........