12/01/2013

மானே தேனே மயிலே என்று மறு படி அழைக்கேனே...


மானே தேனே மயிலே என்று
மறு படி அழைக்கேனே உன்னைக்
காணும் பொழுதில் கண்களில் கூட
அந்த நினைவதை நிறுத்தேனே!

போடி போடி பெண்ணே உன்
பாசம் எல்லாம் பொய்யே!
தீயில் வாடுது மனமே உன் விழி
தீண்டியதனால் வந்த ரணமே!

                                              ( மானே தேனே...)

நேசம் வைத்தது யாரோ!- என்
நெஞ்சைச் சுட்டது யாரோ!
மானம் போனது எதனாலே உன்
மதியை மயக்கிடும்  கண் அதனாலே ..

நான் ராமன் அல்ல ராவணன் என்று
சில ராட்சியம் சொல்கிறது -அதை
ராவும் பகலும் நினைக்கிற பொழுதில்
மனம் பூச்சியம் ஆகிறது!

                                                 
உறவோ பிரிவோ
உனை நான் வாழ்த்திட
ஒரு போதும் மறவேனே...
மனம் சருகாய்ப் போகும்
போன பின்னாலும்
தந்த சத்தியம் தவறேனே!

குயிலின் பாசை புரிகிறதா?- மனக்
குமுறல் எதுவெனத்  தெரிகிறதா?
உறவைக் காக்க மறந்தாலும் நல்
உணர்வைக் காத்துத் தந்து விடு .............

                                                            ( மானே தேனே....)  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

 1. அற்புதமான காதல் கவிதை
  சப்தமாகப் பாடி ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா
   முதல் வரவிற்கும் இனிய நல் வாழ்த்திற்கும் !!

   Delete
 2. உறவோ பிரிவோ
  உனை நான் வாழ்த்திட
  ஒரு போதும் மறவேனே!..
  மனம் சருகாய்ப் போகும்
  போன பின்னாலும்
  தந்த சத்தியம் தவறேனே!..

  அன்பினை வெளிக்காட்டும் அருமையான வரிகள்!..
  வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
 3. அப்படி என்ன குமுறலோ? தங்களது கவிதைகளில் மெல்லிய சோகம் தென்படுகிறதே....

  ReplyDelete
 4. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் அம்மா...

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  ReplyDelete
 5. சிறப்பான வரிகள்.. பாராட்டுகள்.

  ReplyDelete
 6. //குயிலின் பாசை புரிகிறதா மனக்
  குமுறல் எதுவெனத் தெரிகிறதா ?....
  உறவைக் காக்க மறந்தாலும் நல்
  உணர்வைக் காத்துத் தந்து விடு .............//

  மிக அருமையான உணர்வுகளுடன் ஓர் ஆக்கம். பாராட்டுக்கள்.

  ஜூஸ் பருக வரக்காணோம் ?????

  http://gopu1949.blogspot.in/2013/11/85-2-2.html

  ReplyDelete
 7. இனிய கவிதை.. !

  வாசிக்க வாசிக்க இனிமை..!

  வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!


  இன்று என்னுடைய வலைத்தளத்தில்:

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete
 8. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. \\உறவைக் காக்க மறந்தாலும் நல்
  உணர்வைக் காத்துத் தந்து விடு\\

  மனம் தொட்ட வரிகள். உறவுக்கு மதிப்பளிக்காவிட்டாலும் உள்ளத்தின் உணர்வுகளுக்காவது மதிப்பளிக்கத் தெரியவேண்டும். மனத்தின் உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும் கவிதை. பாராட்டுகள் அம்பாளடியாள்.

  ReplyDelete
 10. உறவு தொலைந்தாலும் உணர்வைக் காத்திடு என்ற வரிகளில்
  எத்தனை வலி! அப்படியே உணர்வைக்
  கொட்டிவிட்டிருக்கின்றீர்கள் கவிதையில்..

  மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கவிதை!
  பிரிவின் வேதனையைப் பிழிந்து பாடலாக்கிய விதம் அருமை!

  இசைப்பாடல் தரத்தில் முன்னணியில் இருக்கின்றது தோழி உங்கள் ஆக்கங்கங்கள்!

  உளமார வாழ்த்துகிறேன்! வளரட்டும் உங்கள் திறமை!
  வாழ்க வளமுடன்!

  த ம.5

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........