12/04/2013

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நம்புங்க .....


அழகென்ன அழகென்று
அகம் வியந்து நிற்கிறது!
இயற்கை அதன் அழகு கண்டே
இதயம் பறி போகிறது!

மனப் பாறை குளிர்ந்திடத்தான்
மழையும் இங்கே பொழிகிறது!
மனிதன் இனப்போரை நடத்துவதால்
மனதில்  இன்பம் குறைகிறது!

அகத் தூய்மை இல்லாதார்
அறிவாரோ இத் துயரை!
அன்று தொட்டு இன்று வரை
அதே கேள்வி எழுகிறது!

குண்டு மழை பொழிந்துலகைக்
குப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
படிப்பினையை யார் தருவார்!


எங்கும் உயிர்கள் போகிறது!
எதிலும் குறைகள்  நேர்கிறது!
அரசியலில் இதுவெல்லாம்
அவசியமாய்ப் படுகிறது!

அந்த நாடு இந்த நாடு
எந்த நாடு என்ற போதினிலும்
சொந்த நாட்டைக் காப்பதற்கே
சூழ்ச்சி செய்வார் உலகினிலே!

ஒட்டுமொத்த நாட்டினிலும்
இன ஒழிப்பை எதிர்த்து வந்தால்
கட்டித் தங்கம் இவர்களைத்தான்
கடவுள் என்றும் நாமுரைப்போம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. கட்டித் தங்கம் இவர்களைத்தானே
    கடவுள் என்றும் நாமுரைப்போம்
    >>
    அப்படிப்பட்ட கடவுளை காண நமக்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லை அக்கா!

    ReplyDelete
  2. சித்திக்க வேண்டிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  3. //குண்டு மழை பொழிந்துலகைக்
    குப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
    பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
    படிப்பினையை யார் தருவார் ????...!!!!///
    ????

    ReplyDelete
  4. //கட்டித் தங்கம் இவர்களைத்தானே
    கடவுள் என்றும் நாமுரைப்போம்.//

    கட்டித்தங்கம் போன்ற கவிதை தந்துள்ள கட்டித்தங்கத்திற்கு நன்றிகள்.

    இன்னும் ஜூஸ் சாப்பிடவே வரவில்லையாக்கும். ;(

    http://gopu1949.blogspot.in/2013/11/85-2-2.html

    ReplyDelete
  5. மனிதன் இனப் போரை நடத்துவதால்
    மனதில் இன்பம் குறைகிறது!..

    அகத் தூய்மை இல்லாதார்
    அறிவாரோ இத் துயரை
    அன்று தொட்டு இன்று வரை
    அதே கேள்வி எழுகிறது!..

    நிதர்சனமான உண்மை. நெஞ்சை சுடுகின்றது.
    கவிதையாக்கம் மிக நன்று..

    ReplyDelete
  6. படங்களும் கவிதை பாடுகின்றன,, பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. சிந்தனையை தூண்டவைத்த கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மனந்தொட்ட கவிதை தோழி!

    என்றுதான் விடியப் போகிறதோ?

    வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
  9. சீக்கிரம் விடியல் வரட்டும்...

    ReplyDelete
  10. கமலின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது ...
    கடவுள்இல்லேன்னு சொல்லலே ,இருந்தா நல்லதுன்னுதான் சொல்றேன் !த .ம 7

    ReplyDelete
  11. கமலின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது ...
    கடவுள்இல்லேன்னு சொல்லலே ,இருந்தா நல்லதுன்னுதான் சொல்றேன் !த .ம 7

    ReplyDelete
  12. எங்கும் உயிர்கள் போகிறது
    எதிலும் குறைகள் நேர்கிறது
    அரசியலில் இதுவெல்லாம்
    அவசியமாய்ப் படுகிறது ......//சரியாக சொன்னீர்கள் சகோதரி.இனியாவது நல்ல காலங்கள் பிறக்கவேண்டும்.

    ReplyDelete
  13. அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்...

    நல்ல கவிதை...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........