இறந்தும் இறவா நல் வாழ்வுபெற
இறைவன் கொடுத்த வரம் இதனை
இரங்கி நீயும் கொடுத்துப் பார்
இன்னல் நிறைந்த தருணம் அதில்
உயிர்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியால்
உள்ளம் மகிழும் தன்னாலே அதை
உகர்ந்து நீயும் ஏற்றுக்கொண்டால்
உனக்கும் மனதில் மாற்றம் வரும்!...
பரந்த உலகில் எம் கனவுகளை
பலிக்கச் செய்யும் நோக்குடனே
பகலும் இரவும் பாடுபட்டு நாம்
பட்ட துன்பம் மறந்திடவே
சின்னச் சின்ன தானங்களை
சிறப்பாய் நீயும் செய்து வந்தால்
சிறந்த மனிதனாய் மட்டும் அல்ல
சிந்தை குளிர்வாய் ஓர் நாளில்!!!...
மரணம் என்பது இயல்பாகும்
மண்ணில் பிறந்த உயிர்களுக்கு
மனதில் ஆசையை தூண்டிவிக்கும் கண்
மறைந்தும் மறையா வாழ்வு பெற
இறக்கும் முன்னே ஓர் சாசனம்
இன்றே எழுது உன் மனம்போலே
இருக்கும் இதயம் அதைத் தந்தும்
இறைவன் ஆவாய் எந்நாளும்!!!.....
எரியப் போகும் உடல் இதனில்
எந்த தானம் செய்தோமோ அதை
எட்ட இந்த உலகத்திலே
எதுவும் இல்லை அதை நாம் அறிவோம்!...
பகட்டு வாழ்க்கை வாழ்ந்து இங்கே
பட்டுப் போகும் முன்னாலே
பலரின் உயிரை வாழ வைத்த
பண்பால் நாமும் உயர்வோமே!!....
வறட்டுக் கெளரவம் தோல்விகளால்
வலிமைகொண்டு உயிர் துறக்கும்
வந்த பயனை அறியாத நாமும் இங்கே
வலி மறந்து நல் வாழ்வளிப்போம்!....
தவிக்கும் உயிர்கள் நன்மை கருதி
தரணி எங்கும் பரந்து வாழும்
தன்னலம் அற்ற உறவுகளே
தயவு செய்து தோள்கொடுங்கள்!....
உயிர்க்கு உயிர் செய்யும் தானம்
உயிருள்ளவரை மறவாதே இதை
உணர்ந்த நாமும் முடிந்தவரை பிறர்
உணரச் செய்வதும் எம் கடன்தானே!.....