வாழ்க்கை என்னும் படகினை
வளமாய் ஓட்டிச் சென்றிட
நம் நாட்டின் சுதந்திரம் என்பது
நலமாய் இருத்தல் வேண்டுமே !...
கூட்டம் போட்டு தினம் தினம்
கொள்ளை அடிக்கும் அரசியல்
நாட்டம் மிகுந்து போனால் அங்கு
நாட்டின் வளங்கள் செளிக்குமோ!....
பண்டைக் காலம் முதற் தொட்டு
படை எடுக்கும் வரலாறு அது
இன்றும் தொடர்ந்து வந்தாலே
நாடு இரண்டுங் கெட்டான் ஆகாதா!...
சொந்த மண்ணில் அடிமைகளாய்
சுறணை கெட்டு வாழ்வதற்கு
எந்த உயிரும் விரும்பாதே
இந்த நிலையது முதல் மாறாதா!!!....
லஞ்ச ஊழல் செய்வோரும்
சுய லாபம் கருதி வாழ்வோரும்
எந்த அரச தொழிலிலும் இனி
இருக்கும் பதவி இழந்தால்தான்
அன்று பெற்ற சுதந்திரம் இனி
அழகாய் மலரும் இந்நாளில்
துயர் வென்று பகைமை தீர்ந்தொரு
சுமூக நிலைமை தோன்றட்டும்
பஞ்சம் பட்டினி என்பதே ஒரு
பழைய கதையாய் போகட்டும்
இனி எஞ்சி உள்ள யீவன்களுக்கு செல்வம்
இரண்டு மடங்காய் பெருகட்டும் !.......
சட்டம் ஒழுங்கு நாட்டினிலே
சமத்துவமாய் தொடரட்டும்
குற்றம் குறைகள் தவிர்த்தே நல்ல
குடும்பம் போல நாடு தழைக்கட்டும்!....
பாரத மாதா மடிதனிலே இங்கு
பாவிகள் யாரும் இல்லை என்று
கூடியே நாட்டியம் ஆடிடுவோம் அந்த
குலமகள் நெற்றியில் சுதந்திர பொட்டணிவோம்!...








































IMG_8379-Hans.jpg)