தழைத்திடும் ஆக்கமும் இங்கே
வளம்பெற வாழ்த்திடும் நல்
உறவுகள் தரும் விருதுகளும்
கருத்துரை மழைகளும்
நற்கவனமும் அன்பும் பெருகிட பெருகிட
புது சந்தங்கள் நெஞ்சில் வந்தாடுதே!....
இந்த சொந்தங்கள் வேண்டும் எந்நாளுமே
வளர் சிந்தையைத் தூண்டும் பொன் போலிதே!..
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க
செந்தமிழ் ஊற்றினில் நாம் மிதப்போம்
பல சிந்துகள் பாடியே தமிழ் வளர்ப்போம்
அன்பெனும் சோலைக்குள் சாலை அமைத்து
என்றுமே சேர்ந்திங்கு நாமிருப்போம்!.....
சந்தணக் காற்றாய் மணம் பரப்பும்
சங்கதி எல்லாம் நாம் உரைப்போம்
வந்திடும் துயரைத் தீர்த்திடுவோம் வலைத்தள
சொந்தங்கள் என்றே எமை நாம் நினைப்போம்!...
டிஸ்கி :வலைச்சரத்தில் தினந்தோறும் அறிமுகமாகும்
அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும்
இதுவரை அதில் ஆசிரியப்பணியை நிகழ்த்தி பலரையும்
சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்த சகல
வலைத்தள சொந்தங்களுக்கும் என் நன்றியையும் மனம்
நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான் மிகவும்
மகிழ்ச்சியடைகின்றேன்.....
எனக்கும் விருது தந்து மகிழ்வித்தமைக்கு நான்
என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் .
முனைவர் இரா .குணசீலன்
திரு .நிலாவன்பன்
திருமதி .லக்ஸ்மி அம்மா
திரு .வை .கோபாலகிருஸ்ணன் ஐயா
இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
நன்றிகள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி உறவுகளே
உங்கள் வரவுக்கும் இனிய நற்கருத்துக்களுக்கும் .

















































IMG_8379-Hans.jpg)