12/29/2012

2013 ராசிப்பலன் உங்களுக்கு எப்படி


தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்
தூய உள்ளம் நிலைக்க வேண்டும்
பட்ட கஸ்ரம் நீங்க வேண்டும் அந்தப்
பகவான் அருள் கிட்ட வேண்டும் ........

விட்டத்திலே இருந்து செல்வம்
விடிய விடியக் கொட்ட வேண்டும்
ஸ்ரத்துக்கு நீங்க எல்லாம்
இனிய வாழ்வு வாழ வேண்டும்

அன்பு எங்கும் நிலைக்க வேண்டும்
அடிமைத்தனம் அகல வேண்டும்
ஆயுள் பலம் பெருக வேண்டும்
மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்

நொந்த உள்ளம் சிரிக்க வேண்டும்
நோய் நொடிகள்  அகல வேண்டும்
பாலை வானத்திலும் பூ பூக்க வேண்டும்
பசுமையான உலகம் மலர வேண்டும்

சொந்த பந்தம் இணைய வேண்டும்
சோகங்களை மறக்க வேண்டும்
சண்டை எங்கும் ஒழிய வேண்டும்
சமத்துவம் எதிலும் நிலைக்க வேண்டும்

பக்தி மிகையாய் இருக்க வேண்டும்
பாரினில் நீதி தழைக்க வேண்டும்
அறிவு திடமாய் இருக்க வேண்டும்
பேராற்றலால் வெற்றி நிட்சயம் கிட்ட வேண்டும்....

இத்தனையும் எனது ஆசை இதற்கு  மேலும்
நல்லது நடந்தால் சொல்லுங்கள் உறவுகளே !.....:))))

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/18/2012

கொட்டும் முரசொலி கொட்டும்


கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும்   தாளம் தட்டும்!.
கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!....

அந்தக் காலம் வரும் நேரம்
எந்தன் யீவன் இங்கே காத்திருக்கும்.....

                               (கொட்டும் முரசொலி ....)
மொட்டும் மலராகும்
தேய் பிறையும் முழு நிலவாகும்
நாம் கற்கும் தமிழ் என்றும்
இன்பம் பொங்கும் தேன் மழையாகும்

விட்டுக் கொடுப்பேனோ
என் தாயே உன்னை  நானும்
மட்டுப் படுத்தாமல் தினம்
மலை போல் இங்கு வளர்ப்பேனே !......

                                    (  கொட்டும் முரசொலி )

விட்டுப் பிரிந்தோமே எம்
தாயே உன் தேகம் !...........
கட்டுக்கடங்காமல் வரும்
துயர் என்றும் எம்மை வாட்டும்

முத்துத் தமிழ் மொழிபோல் இங்கு
மொழியே இல்லை என்பேன் !................
உன்னைக் கற்றுத் தருவோர் முன்
அன்பாய்க் காலில் நான் விழுவேனே

                                           (  கொட்டும் முரசொலி )
சுற்றிக் கடல் நடுவில் ஓர்
சொர்க்கம் என்   தாய் நீதானே !...
உன்னைக் கட்டித் தழுவாமல்
கரு முகில் போல் ஆனேனே !.......

கொட்டும் பனி மலையில் வாடும்
சிட்டுக் குருவி என் சோகம் அது
விட்டுப் பிரியாமல் தினம்
வாட்டும் போதெல்லாம் எந்தன்
உயிரில் எழுதிடும் பாடல் கேட்டு

                                                   (  கொட்டும் முரசொலி ) 

                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2012

முற்றுப் புள்ளியே ......



முற்றுப் புள்ளியே!- அடி
முற்றுப் புள்ளியே உன்னை 
முத்தமிட்ட குற்றத்துக்கு 
இந்தக் கதியா?

கட்டில் சுகமும் இனி 
மெத்தக் கசக்கும் நீ 
கற்றுத் தந்த பாடம் அது 
நெஞ்சில்க்  கிடக்கு 

                  (முற்றுப் புள்ளியே..)

விட்டில்ப் பூச்சி போல் 
உன்னைச் சுற்றி வந்தேனே 
நீயும் வெக்கப் பட்டு நிற்பது போல் 
என்னைச்  சுட்டெரித்தாயே!

உன் பட்டு உடல் மேல் 
என்றும் மோகம் இல்லடி என்
அன்பைப் பட்டியல் இட்டால் 
இங்கு யாவும் பொய்யடி...

கற்றுத் தரவா? நீ என் உயிர்க் 
காதல் தீபம் அல்லவா!
உன்னை விட்டுப் பிரிந்தால் 
இங்கு வாழ்க்கை ஏதடி!

வெண்ணிலவே  உன் நினைவில்  
நானிருக்கும் போதினிலே 
பொன் பொருளை நாடவில்லை
உன் அன்பை மட்டும் தேடுகின்றேன்

பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !....
பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !...........

மண்ணுக்குள்ளே போகும் முன்பே 
என்னைக் காண வா வா ...
                                (முற்றுப் புள்ளியே..)                     


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2012

பாரதியார் பாடல்கள் தந்த துணிவே என் கவிதைகள்



"பாரதி "என்றொரு வரி உன்
பெயரதை எழுதினால் போதும் 
மீதியை நான் உரைப்பான் ஏன்!..
ஒவ்வொரு வீதியும் உன் கதை சொல்லும்!....

நீதியை நிலை நாட்டிட எங்கும் 
நீ தீயென வலம் வந்தாய் !........
எம் ஆருயிர் உள்ள வரைக்கும் 
யார் இதை இங்கு மறப்பார் !!!!.....

சாதிகள் இரண்டென உரைத்தாய் 
அவரவர் சங்கடம் தீர்த்திட விரைந்தாய் 
உன் பாவினால் நன்மைகள் புரிந்தாய் 
எப் பாமரரும்  மனம் குளிர நீ வளர்ந்தாய்!.....

பூமகள் பாதம் பணிந்திடும் பக்தன் 
உன் ஞாபகம் ஒன்றே போதும் 
இங்கு தேன் மழை போல் சந்தம் 
எம் நாவினிலும் வந்து நின்றாடும் !....

நான் வணங்கிடும் பாரதியே ........
நீ மலர்ந்த பொன்னாள் அதனில் தான்  
வீரமும் விவேகமும் மலர்ந்தது என்று 
நான்முகன் இங்கொரு காரணம் சொல்லானோ!!.... 

பாவலர் உள்ளத்தின் படிக்கட்டு 
நீ இல்லையேல் எமக்கேது புது மெட்டு
நான் வரைந்தது கவிதை என்றால் இதையும் 
நீ கொடுத்ததன் துணிவுதான்  என்பேன் !!!!!.............

வா மகனே வா என்று உன்னை இங்கு 
வாரியே அணைத்திடத்  தமிழ்த் தாய் இன்றும் 
பூமியில் தவமாய்த் தவம் இருக்கின்றாள் 
பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12-12-12-ரஜனி - பிறந்த நாளும் ஓர் அற்புதம்!!.....



திக்கெட்டும் வாழ்த்தொலிகள் இன்று
திகைத்துத்தான் போகிறது மனம்........!!
பக்கத்திலும் நெருங்க முடியாத புகழின்  உச்சி
எது இருந்தும் பரவசம் கொள்ளாத ரஜனி!!!!.....

ஆக்கத்தில் சிறந்த மனிதன் அவன்
தூக்கத்திலும் ஓர் ஏக்கம் இருக்கும்
பார்க்கின்ற கண்கள் பரவசம் கொள்ள
பரந்த வெளியில் சிறந்த வழியில்
அடைந்த புகழ் இது!!!!...

மாற்றங்கள் நூறு வந்தாலும் இங்கு
மாறாத உன் புகழைப் போற்றுவோர்
போற்றாது போவாரா  சொல் இப் பூவுலகில்
நீ பிறந்த நாள் அதுவும் புதுமையானதே!!!!....

வியந்து பார்க்க நடிப்பில்  திறனை
விளையாட்டாக செய்து முடிக்கும்
நடிகன் உனக்கு ரசிகர்கள் பல கோடி இருந்தும்
எந்த மயக்கமும் அற்றதே உன் மனதின் எல்லை!!!!....

என் வாழ்த்துக்குக்  காரணமும் இது ஒன்றே
உன்னை வாழ வைக்கும் இறைவனுக்கும்
நன்றி சொல்வேன் இன்பத் தமிழில் என்றும் பேசி
எங்கள் மனதைக் கொள்ளையடிப்பவனே !....

எந்த நோயும் உந்தன் அருகில்
வந்து துயர் தந்திடாது
முந்தும் நூறு வயசை உன் உடல்
முழு சுகம் பெற்றிட வேண்டும் .....


அன்பினாலும் நற் பண்பினாலும்
உயர்ந்து நிற்கும் நடிப்பின் சிகரம் உனக்கு
எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......




தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/10/2012

swiss lotto விழுந்தால் எப்படி இருக்கும்.....


ஐந்து கோடியும் வேண்டாம் அம்மா
பத்துக் கோடியும் வேண்டாம் அம்மா
ஒரு கோடி வீழ்ந்தால் போதும் இந்த
உலகில் உன்னை நான் மறவேன்!!!....

தொண்டு செய்து காலம் கழிப்பேன்
துலங்க வைத்து உன்னை ரசிப்பேன்
கஞ்சி ஊத்தி மனம் குளிர வைப்பேன் என்
காலமெல்லாம் உன்னை நினைத்திருப்பேன்!....

என்ன ஒரு வேண்டுதல் !!!!................
இவர்கள்  போல் பலர் எங்குமே  உள்ளார்
சொந்த நலன் கருதித் தினமும்
கேட்க்கும் வரம்  நிறைவேறுமா !!!!!.......

கொடுத்தால் அது சாமி என்பார்
கூட இருந்தும் பாட்டுப் படிப்பார்
அடுத்தவர் நலனை நினைக்காதவர்க்கு
ஆண்டவன் மீதும் ஆத்திரம் இருக்கும்!....

பாத்திரம் அறிந்து பிச்சை இடவும்
படைத்தவன் அவனுக்கு நன்கு தெரியும்
பல சாத்திரம் கற்று முடித்தவராயினும்
பக்குவம் இழந்தவர் ஏதும் அற்றவரே!!!!....

உட் பொருள் அறியாத் தத்துவம் போல்
உலகினில் தெய்வம் இருந்தாலும்
அதன் அற்புத சக்தி வேறாகும் அதை
அறிந்தவர் உள்ளம் வெண் மதியாகும்!!!!!......

நிற்பதும் நடப்பதும் அவன் செயல் என
நினையா மனதுடன் போட்டி என்ன!!!!! .....
எப்பொழுதும் எமைக் காத்திட வல்ல
இறைவன் இருக்கின்றான்  என வணங்கு!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/09/2012

காசு காசு காசு எங்க இருந்து அள்ளுறதாம்!....


உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும் 
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/04/2012

பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்....


பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்
தேன் துளி விட்டுச் செல்லும் தேனீக்கள்
யார் இதை அழித்திட நினைத்தாரோ ...அந்த
வாசகர் நெஞ்சம் என்றும் வீண்தானே !...........

காகித ஓடம் நான் தொடுத்தேன் அம்மா......
கங்கையில் கண்ணீரைச் சேர்த்து விட்டேன்
பூமகள் பாதம் சேர்ந்திட வேண்டும்
புண்ணிய நதியே வந்துதவு!!! .................¨

                             ( பா மரம் பட்டுப் போகும் )
நீதியின் கண்கள் மூடியதாலே
நெஞ்சினில் தீப்பொறி பட்டதென்ன .....
பாவிகள் போகும் பாதையில் மட்டும்
சிலர் பாரிய முட்களை நட்டதென்ன !!!....

கோவிலில் இருக்கும் சிற்பத்தை எவரும்
தெருக் கோடியில் போட்டு உடைப்பாரா .....
கேள்விகள் எழுந்தால் கேலியாய்ப் பதிலைக்
கேட்பவர்க்கெல்லாம் உரைப்பாரோ !....

ஆயிரம் ஆயிரம் வேதனை  நெஞ்சினில்
யார் இதன் காரணம் அறிவாரோ .............
கூவிடும் குயிலின் குரவளை அதனில்
இனியும் கூரிய கத்தியை வைப்பாரோ !!!......

                           (   பா மரம் பட்டுப் போகும் ....)

நீதியே  கண்களை நீ  திறவாயோ ........
நீ மழையாய் இங்கு பொழியாயோ ...
ஓர் துளி ஈரம் பட்டாலும் போதும்
உள்ளத்தில் அமைதி தங்கிவிடும்

பாரினில் துயரம் பெருகிடும் பொழுதில்
பார்ப்பவை எல்லாம் பொய்யாகும்
தேவி உன் பாதம் தேடியே வந்தோம்
தீந்தமிழோடெம்மை  வாழ விடு ........

                        (   பா மரம் பட்டுப் போகும் ....)


                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/29/2012

வெறும் புகழ்தான் இங்கு வாழ்க்கையா



கவிதை மழையில் நனையும்போது
உறையும் பனியும் சுடுகிறதா !!!!.......
இந்த விதியை மாற்ற முயலும்போது
உன் மதியில் சஞ்சலம் எழுகிறதா......

பிறர் அருமை பெருமை தெரிந்திருந்தால்
அன்பைச் சிதைக்க மாட்டாயே உன்
வலிமை கொண்ட எழுத்தினாலே
நல் வாழ்வை அழிக்க மாட்டாயே .....

கருவில் இருந்து தெருவில் வந்து
களங்கம் உற்ற பின்னாலும்  இந்த
உயிரைக் குடிக்கத் தூது எதற்கு இனி
ஊன் உடலும் இதனை ஏற்காதே !!...

அமைதிப் பூங்கா நடுவினிலே அன்று
அக்கினிக் குண்டை ஏன் எறிந்தாய்!.....
உன் நிழலைக் கூடக் காணா மனிதரும்
நின்மதி இழந்து தவிப்பதர்க்கா !!!!...........

கருணை உண்டா உன் இதயத்திலே
களங்கம் சொல்லிப் போகின்றாயே
இன்று எரிமலையைப்போல சிதைந்த மனம்
இனியும் அமைதி கொள்ளாதே ....................

வறுமைக் கோடும் வதைக்கா மனதை
சில  வார்த்தை என்றும் அழித்துவிடும்
பிறர் உணர்வைக் கொன்று பெருகும் புகளில்
அப்படி என்ன ஓர் இன்பம் வந்து விடும் !!!!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2012

துயிலும் இல்லம் நோக்கி






துயர் படிந்த பாதை எங்கும் மெழுகானார்!
உள்ளத் தூய்மையினால் எமக்கிங்கே உயிரானார்!
பகைவருக்கும்   பணியாத ஒளியானார்!
எம் பாசம் மிகு மாவீரத் திலகங்கள்!


ஒரு கொடியில் பூத்த மலர் மணம் மாறுமா!
ஓங்கு தமிழ்க் குலத்தினது மொழி மாறுமா!
வறுமையிலும் மாறாத பண்பு மாறுமா!
எம்மை மாற்ற எண்ணும் எண்ணம் அது நிறைவேறுமா!

நடந்து வந்த பாதை அதை நினைத்துப் பாரடா!
நம்மவரின் சடலம் இன்றி வேறு ஏதடா!
எரித்த உடல் சாம்பலாகி வானில் பறக்குதே!- இன்னும்
எரியும் உடல் இங்கிருந்து கண்ணீர் வடிக்குதே!

சிலர் நடந்த கதை முடிந்ததென்று பின்னே செல்கிறார்!
நரிகளிடம் கூலி வாங்கி வயிறை வளர்க்கிறார்!
தமிழனது உள்ளமதை வதை வதைக்கிறார் பின்
தரம் இழந்த பின்னாலும்  தமிழன் என்கிறார்!

பரந்த கடல் வெளி எங்கும் பார்த்து நிக்குறார்
பாசம் மிகு காவலராய் எங்கள் மாவீரர்! - அவர்கள் 
இழந்த இரத்தம் உறைவதற்க்குள் இந்த ஆட்டமா!
எம் இனத்தவனே உனக்கு இது நீதியாகுமா!

தவழ்ந்த தரை மறந்து நீயும் தாவிக் குதிக்கிறாய்!
ஏன் தமிழினத்தின் பெயர் கெடுக்க மேலும் அலைகிறாய்!
விரைந்து எப்போ உன் கடனைத் தீர்க்கப் போகிறாய்!
என்றும் விடியலுக்காய் வீழ்ந்தவரை வணங்கிச் செல்லடா.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/25/2012

மாவீரர் நாள் 2012




ஈழத் தாயின் மடிமீது
காரிருளைப்  போக்க வந்துதித்த
கார்த்திகைத்  தீபங்கள்  கண்முன்னே
காட்சி தரும் இந்நாள் எமக்கு பொன்நாளே !...

வானம் கண்ணீர் மழை தூவ
இவ் வையகம் போற்றும் போர் வீரர்
பாதம் தொட்டு  வணங்கிட இன்றே
படை திரண்டு வாரீர் கடல் போல......

ஏழைகள் எங்கள் வாழ்க்கை என்றும்
இருளில் கிடக்கும் நிலை கண்டு
எந்நாளும் துடித்த யீவன்களை
இந்நாளில்க்  காண வாரீர் கடல் போல.....

பாழும் மனதில் பெராசையதால்
படு பாவம் செய்த கயவர்களை
எந்நாளும் அழித்து ஒழித்திடவே
எமக்கெனப் பிறந்த போர் வீர்கள்!.....

இவர்கள் தாகம் என்ன தாகம் இது !!!!.........
என்றும் தணியாத சுதந்திர தாகம்
உடல் வீழும் வரைக்கும் தளராததால் தம்
உடலையும் விதையாய் வீழ்த்திச் சென்றனரே!!!!....

போரினில் சிறந்த போர் வீரர்கள்
இப் புவியினில் எவரெனக் கேட்டாலிங்கே
நாளை இந்த உலகம் சொல்லும்
நம்மவர்  பெயர்கள்  அல்லால் வேறேது !!!!....

தோழில் சுமைகள் தாங்கியபடியே
துரோகிகள் வரவை எதிர்த்து நின்று அன்று
காவல் காத்த தெய்வங்கள் இவர்களைக்
காணக் கடல்போல் திரண்டு வாரீர் ..............:(

எம் மானம் பெரிதென நினைத்தவர்கள்
தம் மனதில் துயரை வடித்தவர்கள்
ஈழத் தாய் எம் தாய் ஈன்றெடுத்த
இனிய புதல்வர்களைக் காண வாரீர்.....!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/20/2012

ரோஜா மலரே ரோஜா மலரே.....



ரோஜா மலரே ரோஜா மலரே
முள்ளில் ஏனடி விழுந்தாய் நீ...
உடல் கீறிக் கிழித்து பாயும் இரத்த
வெள்ளம் கண்டால்  தாங்காதே !....

கோலம் போடும் கண்ணே  உந்தன்
மனக் கோட்டை சிதைந்தது எதனாலே
அந்த ஆளும்கட்சி தூளாய்ப் போகும்
அடி அடிமைப் பெண்ணே  கலங்காதே !:......
                                       (ரோஜா மலரே ரோஜா.....)

வீரத்தாயின் புதல்வி அம்மா
உன்னை உலகம் அறியாது உன்னை
அறியும் காலம் வந்தால் போதும்
இங்கு  அரக்கர் மனமும் தாங்காது !.......

நீலக் கடல் என சொல்வார் உலகில்
நீருக்கிங்கே நிறம் ஏது இதைப்
பாளாய்ப் போன மனம் உணர்ந்தாலும்
சொல்லும் பழக்கம்  என்றும்  மாறாது !...

வீணாய்ப் போகும் மனிதர் பேச்சு
அவர்கள் விருப்பம் போல  இருக்கட்டும்
பெண்ணே உந்தன் உள்ளத்தழகு
அது என்றும் உயர்ந்தால்  போதுமடி ...

கோளைக்கில்லை பெருமை இங்கே
பொறுமைதானடி வெல்லும் என்று
உன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்த
ஒற்றை நாணயம் அது பதில் சொல்லும்!....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.......
அடி ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/13/2012

காதோரம் காதல் சொல்லும்


காதோரம் காதல் சொல்லும்
உன்  பாடல் கேட்டால் போதும்
உடலும் மனமும் தீயில் எரியுது
அடி பெண்ணே உன்னாலே !......
என்னை அளவும் தொழவும்
விட்டுச் சென்ற ஆணவக்காரி நீதானே !....

தெருவோரம் நான் தூங்க
என் விழி நீரில் பயிர்  வாழ
உனக்கென்ன பெண்ணே சொல் என்
உயிர் மூச்சைக் கொண்டு சென்றாயே!

கனக்கின்ற இதயத்தில் இங்கே
உனக்காகவே   நான் வடித்த
கவிதைக்குள் அர்த்தப்  பாரம் அதை
இறக்கத்தான்   துடிக்கின்றேன் நீ
எனக்காகப் பிறந்தாயோ.... போ ..போ போ ....

மலைப் பாம்பு போல் உன் ஆசை என்
மனதை  விழுங்கிச் செல்லத்தான்
தடு மாறுதே!  என் உள்ளம் இருளானதே!
விடியாத பாதைகள் விரிகின்றதே!- அதில்
போதை இன்றி நெஞ்சம் அலை மோதுதே!

கனாக் காணும் உள்ளங்கள்  உலாப் போகுதே!
நிலா கூட என்னைக் கண்டு இடம்மாறுதே!
இதுதான் உன் காதல் தந்த பாடம் இனிக்
கண்ணில் கங்கை ஓடும் .........புது ராகம்
உனைச் சேரும் அதில் சோகம் எனதாகும்
அது போதும் போதும் போதும் பெண்ணே ...

                                                             (  காதோரம் காதல்....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2012

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்



மனம் இனிக்கப் பேசும் முல்லை
மலரே இங்கு உன்னை வாழ்த்த
வெண்ணிலவை நானளைக்கவோ ஓஓஓ ஓஓ .....
விடி வெள்ளிகளால் மாலை கோர்க்கவோ .....

மானே எந்தன் மாங்குயிலே .....
தேனே.... எந்தன் திகழொளியே ...
நீயே... எந்தன் யீவனடா ...
எந்நாளும் இங்கு நீ வாழ
என்னுயிரை நான் கொடுத்து
வாழ வைப்பேன் !¨..உன் மடியில்
நான் தவழக் காத்திருப்பேன் !.........

                                                  (   மனம் இனிக்கப் )

பூவே இளம் பூவே உந்தன்
உள்ளம் அது வெள்ளை என
இந்த ஊரும் உலகும் போற்றும்போது
உன்னால் நானும் மகிழ்வேனே ......

வீரம் வேண்டும் நெஞ்சினிலே
வெற்றி என்றும் உனதாக நல்ல
ஞானம் வேண்டும் மகனே உந்தன்
வாழ்க்கை என்றும் சிறப்பாக .....

கோலம் போடும் கண்ணாலே என்னைக்
கொள்ளையடித்துச் செல்பவனே ......
எந்நாளும் இன்பம் பொங்கிடவே
இந்நாளில் நாமும் வாழ்த்துரைப்போம்....

ஆலம் விழுது போல் உன் வாழ்வு
அன்பால் உறுதி கொள்ளட்டும்
உள்ள காலம் முழுதும் உன்பெயரை
அந்தக் காலன்கூட சொல்லி மகிழட்டும் ...

ஏழை எளிய மக்கள் எல்லாம்
இவன்போல் துணைவன்  இல்லை என்று
நாளை இந்த யுகமே போற்ற
நலமாய் வாழ வாழ்துரைப்போம் .....

                                                  (   மனம் இனிக்கப் )                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/29/2012

ஈழத் திருநாடே எந்தன் தாய் நாடே



ஈழத் திருநாடே என்றன்  தாய் நாடே!
உ(ன்)னைக் காணும் ஆவல் நெஞ்சினிலே
எந்நாளும் இங்கு பொங்குவதேன்!
வானம் பாடி சிறகை இழந்து
வாட்டும் இந்தக் குளிர் நாட்டில்
நாட்டம் இன்றி ஏனோ இங்கே
வெள்ளோட்டம் ஓடுது  எந்நேரமும்!

பனிப் பூக்கள் தலை மேலே தினம் தூவ
இனி காச்சல் சளி நோயால்  உடல் வாட
இது என்ன  சாபம்! -  அடி போடி
உன் மடி மீது நாம் தூங்கும் சுகம் வருமா!

நறு மணம் வீசும் மலர்க்கூட்டம்
உன் எழில் கொஞ்சும் தரைமீது
தினம் தினம் உறவுகள் வலம் வரவே
தீராத சந்தோசம்  அது தீர்ந்து போனதின்று!

மாறாப்பு போட்ட மங்கை இவள்
மனசுக்குள் ஓடும் கங்கை வந்த
வீராப்பு அடங்கிப் போக விழிநீரால்
கோலம் போடுவதேன் இங்கே!
தாய் நாடே சொர்க்கம் சொர்க்கம்
அதைத் தயங்காமல் சொல்வதற்கு
ஏன் இந்த வெக்கம்!

பாய் போதும் நாம் தூங்க
பண்பாடு நிறைந்த எம் நாடே!
குயில் பாடும் பாட்டுச் சத்தம்
அது கேட்டால் போதும் போதும்!
மனசுக்குள் பட்டாம் பூச்சி
பட பட பட என்று பறந்திடவே
செந்தமிழாலே கவி பாடி
எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
எங்கே ....எங்கே ..எங்கே!

தேன் கூடு  கண்களுக்குளே
தீராத மோகம் ஊட்ட
 நான் பாடும் பாடல் இது
உனக்கங்கே கேக்குறதா?

                                              (   ஈழத் திருநாடே ...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/17/2012

நீங்களும் தெய்வமாகலாம் .....

உடலைக் குறைக்க நடப்போர் நடுவில்
உணவுக்கு ஏங்கும் உயிர்களைப் பார்!
இந்த வறுமைக் கோட்டை அழிக்கவா  உனக்கு
வல்லமை இல்லை சொல்டா  மானிடனே!

ஒருவர் பசியை ஒருவர் தீர்த்தால்
உலகில் வறுமை அழியாதோ!.......
நாம் தெருவில் சிந்தும் செல்வம் திரண்டால்
உயிர்கள் பிழைக்க முடியாதா!

கருணை வேண்டும் மனிதா உனக்கும்
கையில் இருப்பதைக் கொடுப்பதற்கு!
இது அழியும் உலகம் அதனால்தானோ
மனிதம் மரத்துப் போனதிங்கே!

மெழுகைப்போல நல் இதயம் இருந்தால்
ஒளியைத் தேடி அலைவான் ஏன்!
இந்தக் கொடுமை கண்டும் அசையா மனதை
உருகச் செய்ய நல் வழி தேடு!

விழியில் வழியும் கண்ணீரைக்கூட
அருந்தத் துடிக்கும் நிலையைப் பார்!
இங்கு அழியும் இந்த உறவைக் காக்க இனியும்
இத்தனை தாமதம் வேண்டாமே!

பல மொழியில் பேசித்  திரிந்தால் என்ன
மனிதன் என்பவன் ஓர் இனமே! இவன்
அழியும்போது துடிப்பவன்  எவனோ
அவன்போல் தெய்வம் வேறில்லையே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/15/2012

இப்படியும் ஓர் ஆசை!..(தொடர் கதை பாகம் -3)

யேய் ...ஜோதி உங்கட  அக்காவோட கலியாணத்தத்தான்  சும்மா அந்த மாதிரி சிறப்பா நடத்தி முடிச்சிற்றாங்களே...நீ எப்படீ .... கலியாணம் கட்டிகொள்ளப் போற?....சீ போடி .....அட்றா சக்க எண்டானாம் கலியாணம் எண்டதும்  வெக்கத்தப் பாரு !.....ஹா ...ஹா ..ஹா...அது சரீடி உங்க அக்காவும் அத்தானும் எப்படி லண்டனுக்கு போகினம் ?....அது தெரிய இல்லையடி அப்பா ..ஆனா எனக்கு மட்டும் எங்க அக்காவ விட்டுப்  பிரியிறத நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்குடி.  அப்போ நான் ஒண்டு செய்யட்டுமாடி ?...!..என்னது ?...உங்கட அப்பாட்ட சொல்லி உனக்கும் லண்டன்லையே மாப்பிளைய பாக்கச் சொல்லட்டா?....என்ன கிண்டலா ?...இல்லடி .எனக்கே உன்னப் பாத்தா நான் ஆம்பிளையா பிறந்திருக்கக் கூடாதா  எண்டு கவலையா இருக்குடி...யூ ராஸ்கோல்!....இருடி வாறன் இண்டைக்கு உனக்கு  ....ஜோதி விடடி...பிளீஸ்டீ ....பிளீஸ்டீ ....விடடி என்ன ...அதோ உங்க அப்பா வாறாருடீ ....ஏமாந்திற்றியா !....ஹா ..ஹா ....ஹா ........ சீ போடி நான் உன்னோட இனிமேல் கதைக்கவே  மாட்டன் .கோவிச்சுக் கொள்ளாதடி செல்லம்.. நீ கதைக்க இல்லையெண்டா நான் இனிமேல் யாரோடையும் பகுடி விட மாட்டன்டி அப்பா ..ஐயையோ அத மட்டும் நிறுத்தீராதடி அப்புறம் எங்கட பள்ளிக்கூடமே இருண்டு போயிரும்டி ஹா ஹா..ஹா....சரி வாடி  காப்பி குடிச்சிற்று போகலாம் .

                      அடடே!...வாம்மா மீரா .எப்ப வந்த ?..இப்பதான் ஆன்ரி.வீட்டில எல்லாரும் எப்புடி இருக்குறாங்கள் ?...ம்..எல்லாரும் நல்லா இருக்குறாங்கள் ஆன்ரி .நீங்க எப்புடி இருக்குறீங்க ?....எனக்கென்னடி அம்மா நான் நல்லாத்தான் இருக்குறன் .ஒரு மாதிரி மூத்த பொண்ணோட கலியாணம் முடிஞ்சுது .இனி ஜோதிக்கும் ஒரு நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திற்ரா எங்கயோ ஒரு மூலையில சிவனே எண்டு போய்க் குந்தீரலாம் .கேட்டுக்கோடி உங்க அம்மா சொல்லுறத ....பாருங்கம்மா இவள !..வந்த நேரத்தில இருந்தே  ஏதொ சொல்லி வச்சமாதிரி என்னோட கல்யாணத்தப் பற்றியே பேசீற்று இருக்குறாள் அதுக்கில்லடி அவளுக்கும் உனக்கும் இருக்கிற நட்புக்கு இடையில வேற யாராவது வந்திரப் போறாங்களோ  எண்டு பயப்படுகிறாள் போல. யாருக்கு தெரியும் !....இறைவன் யார் யாருக்கு இன்னார் எண்டு எழுதி வச்சிருக்கிறத !.....
எனக்கு தெரியுமே ஆன்ரி .நம்ம ஜோதிக்கு எங்க அண்ணனையேதான் இறைவன் நிச்சயிச்சு இருக்கிறார் .இனி நீங்கதான் ஆன்ரி அத முடிச்சு வைக்கணும் .ஓ!!!....விசயம் அப்புடி போகுதா ?....அச்சச்சச்சச்சோ  அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிற உண்மைய நான் உங்களிட்ட  சொல்லவே  மாட்டன் ஆன்ரி ...அதுதான் சொல்லீற்றியேடி அம்மா...!!! ஹா ...ஹா ...ஹா...சொல்லீற்றனா ஆன்ரி ?...!!!! போச்சுடா இப்ப நான் என்னடி  பண்ணுறது சொல்லுடி என் தோழி  .....சீ ....போடீ பாருங்க ஆன்ரி என்னப் போச்சொல்லீற்று அவ வெக்கப் படுகிறத ஹா ஹா ...ஹா ....ஹா .....

என்ன இங்க ஒரே சிரிப்பா இருக்கு ?.....அது ஒண்டும் இல்லங்க எல்லாம் நல்ல விசயம்தான் நீங்களும் நானும் ஆசப்பட்ட மாதிரியே உங்க செல்லப் பொண்ணு ஜோதி ஜோதிக்கு என்ன?...அவளுக்கு ஒண்டும் இல்லங்க .அவ நம்ம ரவி தம்பியக் காதலிக்கிறாளாம் .காதலிக்குறாளா ????....யாரக் கேட்டு இவ காதலிக்குறாளாம் ?....நீங்க யாரக் கேட்டு என்னக் காதலிச்சுக் கலியாணம் செய்தீங்களோ அவங்களக் கேட்டுத் தானுங்க .அப்புடியா விசயம் !...    ஆமாங்க அப்புடி எண்டா சரீடி .இந்தக் கலியாணத்தயும்  ஜாம் ஜாம் எண்டு செய்து முடிச்சிர வேண்டியதுதான் .எங்கடி என்ர செல்லப் பொண்ணு ?...ரொம்பவே தேடாதீங்க அங்கிள் .அப்புடியே அந்தக் கண்ணாடியப் பாருங்க!....  நம்ம நிலா அழகா சிரிக்குறத..... ஆமா இல்ல ஹா ...ஹா ஹா ...ஹா ...வெக்கப் பட்டது போதும் வாம்மா இங்க .அப்பா என்ன ஆசீர்வதியுங்கப்பா ..தீர்க்க சுமங்கலியா இரும்மா போ ..போய் உங்க அம்மா கால்லையும் விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ அம்மா நீயும் என்ன ஆசீர்வதியம்மா என் கண்ணு ஆயுசுக்கும் நல்லா இரடியம்மா ......
                                               தொடரும் ......            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/13/2012

இப்படியும் ஓர் ஆசை !!..(தொடர் கதை பாகம் -2 )

அப்பா பிளீஸ் அப்பா ...நீங்க என்னதான் சொன்னாலும் வெளிநாட்டு மாப்பிளைய என்னால கலியாணம் செய்துகொள்ள முடியாதுப்பா  .ராணி இப்புடி அடம் பிடிச்சா எப்புடியம்மா ?...அப்பா நான் உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன் பேசாம இந்தக் கலியாணத்துக்கு ஒத்துக்கோ .அம்மா பாருங்கம்மா நான் வேணாம் வேணாம் எண்டு சொல்லவும் அப்பா ஒரேபிடியா அந்த மாப்பிளையத்தான் நான் கலியாணம் செய்ய வேணும் எண்டு நிக்குறார் நீயாவது சொல்லம்மா இந்தக் கலியாணம் வேணாம் எண்டு .என்னங்க நீங்க அவதான் வேணாம் எண்டு சொல்லுறா இல்ல .பின்ன எதுக்குங்க நீங்க அவள இந்தப் பாடு படுத்துறீங்க ?...கெளரி நீ சும்மா இரு .அவனமாதிரி மாப்பிள இவளுக்கு வேற எங்கடி கிடைப்பான் ?..அம்மாவும் மக்களுமா சேர்ந்து வலிய வாற சீதேவிய தட்டிக் கழிக்க பிளான் பண்ணாதீங்க சொல்லிப்போட்டன் .அது இல்லப்பா தங்கச்சியையும் ,உங்களையும் ,அம்மாவையும் இங்க விட்டிற்று நான் மட்டும் கண் காணாத தேசத்தில போய் என்ன சுகத்தக் காணப் போறன் ?...இதுக்குத்தான் நீங்க என்ன இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வளத்தீங்களா ?....நான் ஏன்னப்பா உங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு வாழ வேணும்?....எவ்வளவுதான் பணம் காசு இருந்தாலும் செத்துப் போனவங்கள உங்களால திருப்பிக் கொண்டு வர முடியுமா ?....இந்தப் பிரிவும் எனக்கு அப்புடித்தானப்பா புரியுது!...அளதடா செல்லாம் இதெல்லாம் பாத்தா ஒரு நல்ல வாழ்க்கைத் துணய தேட முடியுமா!....கண்ணத் துடைச்சுக்கொண்டு வெளிக்கிடு மாப்பிள வீடுக்காரர் வர்ற நேரம் ஆச்சு .கெளரி இந்தாடி நம்ம பொண்ண மகாலட்சுமி மாதிரி வெளிக்கிடுத்திக் கொண்டு வா .போம்மா போ ....
சரி அப்பா . 
                            அப்பா ...அப்பா ...மாப்பிள வீட்டுக்காரர்   வந்தாச்சு .சரி போம்மா ஜோதி நீ போ ..போ... போய்ச் சீக்கிரமா  அம்மாட்ட சொல்லு மாப்பிளை வீட்டுக்காரர் வந்தாச்செண்டு .அடடே வாங்க வாங்க உள்ள வாங்க இருக்கட்டும் இருக்கட்டும்.... எல்லாரும்  உக்காருங்க .நாங்க உக்கார்றது இருக்கட்டும்  முதல்ல பொண்ணக் கூப்புடுங்க !..மாமனாரே ஏன் அவசரப் படுகுறீங்க பொண்ணு வரும் .அதுக்கு முதல்ல பேச வேண்டிய சீர்வரிசையைப் பற்றி பேசுவம் .அவ்வளவுதானே பேசினாப் போச்சு .அது சரி இந்தப் பலகாரம் கிலகாரம் இதெல்லாம் தர மாட்டீங்களா ?....உங்களுக்கில்லாததா ?...:) பெரியப்பா பெரியப்பா ..உங்களுக்கு சுகர் இருக்குது!!!...ஏய் குட்டிச் சாத்தான் இத சத்தம் போட்டுச்  சொல்லாதடி காப்பியிலகூட சுகர் இல்லாம தந்திரப் போறாங்கள் ஹா ..ஹா ...ஹா சிரிக்காதடி செல்லம்.. அப்புறம் உன்ர கண்ணு முழிய தோண்டீருவன் .சீ போ நான் உன்னோட டூ .....

                   ஹாய் ..பொண்ணு வந்தாச்சு ...பெரியப்பா பொண்ணு வந்தாச்சு வாம்மா வந்து எல்லாருக்கும் காப்பியக் குடு .பொண்ணப் பாத்துக்கோங்க சம்மந்தி நாளைக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ .ஸ் ...மருமகளா இல்ல; சம்மந்தி மகளா ....பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !..கேட்டுக்கோம்மா உங்க மாமியாரே சொல்லியாச்சு இனியென்ன தட்ட மாத்திக்கொள்ள வேண்டியதுதானே ?...சம்மந்தி மாப்பிளைய ஒரு வாத்த கேக்க வேணாமா ?...மாப்பிளைய என்ன கேக்குறது கட்டடா  தாலிய எண்டா கட்டீற்றுப் போறான் ஏன்டா டேய் ....மாப்பிள வெக்கப் படுகிறத பாத்தாலே தெரிய இல்லயா!..கலியாண தேதிய கையோட குறிக்கச் சொல்லுற மாதிரி இல்ல ஹா ...ஹா ...ஹா ....எல்லாரும் சிரிச்சது போதும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னால வாப்பா தட்ட மாத்திக்கோ அதெப்புடி சீர் வரிசையப் பத்தி ஒண்டுமே பேச இல்லையே ?...யாராவது இங்க சீர்வரிசையைப் பற்றி பேசினீங்க  துலைச்சுக் கட்டிப் போடுவன் ஆமா!....இந்த மாதிரி பொண்ணு எங்க வீட்டுக்கு காலடி எடுத்து வைக்குறதுக்கு நாங்க தானையா சீர்வரிசை குடுக்க வேணும்.. மாணிக்கம் தட்ட வாங்கிக்கோ உன்னோட பொண்ணு எங்க வீட்டுக்கு உடுத்த சேலையோட வந்தா  அது போதும் !..ரொம்ப சந்தோசம் சம்மந்தி !!!..போம்மா போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ .நல்லா இரும்மா ..நல்லா இரு!!!!...

அப்புறம் என்ன கலியாண தேதியையும் கையோட நிட்சயம் பண்ணிட வேண்டியதுதானே ?...! ஐயரே சீக்கிரமா ஒரு நல்ல நாளாப் பாத்துச் சொல்லுங்க .சரி சரி பாத்துடுறன் ம்ம்ம்ம் ...வாற ஆவணி மாசம் பதினாறாம் திகதி நாள் நல்ல நாளாய் இருக்கு அந்த நாள்ளயே காலியாண திகதிய நிட்சயம் பண்ணிரலாம் .எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க  இதில எல்லாருக்கும் சம்மதம்தானே !....என்ன சம்மந்தி மாப்பிள வீட்டுக்காரர் எங்களுக்கு இதில பூரண சம்மதம் .உங்களுக்கும் சம்மதம்தானே ?..நீங்களே சொல்லீற்ரீங்க இதில நான் என்ன சொல்லப் போறன் !..எங்களுக்கும் இதில பூரண சம்மதம்தான் சம்மந்தி .அப்புறம் என்ன அடுத்த வாரமே கலியாணத்துக்கு தேவையான எல்லா அலுவலையும் செய்திட வேண்டியதுதான்  .அப்போ  எல்லாருக்கும் வணக்கம் .நாங்க போயிற்று வரப்போறம் .போயிற்று வாறம் சம்மந்தி ...சம்மந்தி அம்மா போயிற்று வாறம் ரொம்ப சந்தோசம்!!!!..கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டுக்கும் ......
                                                            தொடரும் ......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

பகவத் கீதையே வாழ்வுக்குகந்த பாதை.



பாற் கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அழகைக் கண்டு
பார் புகழும் தென்றல் காற்றே
பாடாயோ கவிதை ஒன்று !.....

நீல மலர் மாலை கோர்த்து என்
நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும்
ஏழு மலை தாண்டி வந்தும்  இதை
அந்த இறைவனுக்கே சூடி விடு !....

கால நேரம் அவன் கையில்
கணம் பொழுதும் சுத்துகையில்
எம்மை ஆதரிக்கும் பெருமானுக்கு
இந்த அர்ச்சனைகள் மிகவும் நன்று !..

அவதாரம் பத்தெடுத்து உலகில்
எமை ஆளப் பிறந்த இறைவனைத்தான்
மனதாரப் பாடி இங்கு வாயார வாழ்துரைத்தால்
கனியாதோ எந்நாளும் கனிவான பொன்னாளாய்!...

துதி பாடு கண்ணனை எண்ணித்
துயில்கின்ற வேளையிலும் உனக்கு
இனிதான கனவு மெய்ப்படவே
எழுந்தருள்வான் எம் பெருமான் அங்கும்!.....

அரிதாரம் பூசாத அழகு மேனியான்
ஒளிக் கீற்று வீசத்தான் கண் விழித்து
இறைவா வா என் முன்னே என்று நீயும்
எழுந்தாடும் வண்ணம் இன்பம் தந்து

கலையாத சிந்தனை ஊற்றுக்குள்ளே
செங் கதிராக எந்நாளும் அமர்ந்திடுவான்
இவன் பாதம் தொழுதேற்றும் வரம் பெற்றால் பின்
அது போதும் உனக்கிங்கு வேறு என்ன வேண்டும்!....


நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை
தன் நிகரற்ற இறைவன் பாதம் தொழுமின்
உனைத் தேடி வரும் என்றும் வாழ்வுக்குகந்தவை
இதை உணராத மனிதர்க்கே வாழ்க்கை என்பது பெரும் சுமை!!!!........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2012

இப்படியும் ஓர் ஆசை !!!!....(தொடர் கதை)

அடடடடா....என்ன அழகு !....என்ன அழகு !.....சுப்புரமணி நீ வாழ்க்கையில செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானய்யா ....டேய் சும்மா இருடா எனக்கு முன்னாலையே அப்பாவப் போய் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போடா டேய் .அப்போ உனக்கு பின்னால நிண்டு கூப்பிடலாமா மீனாட்சி ?....ஹா... ஹா... ஹா ....என்னங்க நீங்க அவனோட சேந்து சிரிக்குறீங்க ?.........வேற என்னத்த எடி செய்யலாம் சொல்லு ?....எங்களுக்கெண்டு இருக்குறது இவன் ஒரே ஒரு பிள்ளதான். அவன் சந்தோசம்தானேடி எங்களுக்கு பெரிசு .அது இல்லங்க .....என்ன அது இல்லங்க ?..பாக்குறவங்க என்ன நினைப்பாங்க எண்டு சொல்ல வாற அப்புடித்தானே ?...மரியாத மனசில இருந்தா போதும் .ஏன்டா  ரகு உனக்கு இந்தப் பெண்ண புடிச்சிருக்கா ?...     அப்பா நீங்க பாத்த பொண்ணு எப்புடி அப்பா பிடிக்காமல் போகும் ?....சரீடா  வாற தை மாசத்திலயே ஒரு நல்ல நாளாய்  பாத்திர வேண்டியதுதான் .சீ போங்கப்பா எனக்கு வெக்கமா இருக்கு ...மீனாட்சி பாரு பாரு உன்ர மகன் வெக்கப்படுறத ......ஆமா!!!.. இல்ல ......ஹா ....ஹா ....ஹா....வேணாம் ..பிறகு அழுதிருவன் .யேய் அழுதிருவானாமடி !...சரி விடுங்க புளைச்சு போகட்டுக்கும் .என்ர அம்மா எண்டா அம்மாதான் .ம்ம்ம்ம் ...இந்தப் பசங்களே இப்புடித்தான் சமயம் பாத்துக் கால வாரீருவாங்கள் .டேய் கண்ணா நீ கவலப் படதயடா உங்க அப்பா அவரையும் சேத்துத்தான் சொன்னாரு.ஹா ...ஹா ...ஹா ..சபாஸ் சரியான போட்டி ....

      சுப்புரமணி ....டேய் டேய் உங்க தாத்தா குரல் கேக்குது ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதடா  .ஏனம்மா அவர் எங்கட தாத்தாதானே?.. எதுக்கம்மா இப்புடி பயப்புடுற ?..டேய் அவர் என்ர மாமனாரடா .மாமனார் எண்டா பயப்புடணுமா?..அது இல்லடா நீ சின்ன வயதிலயே வெளிநாட்டில போய் இருந்திற்ற அதனால உனக்கு இது ஒண்டுமே புரியாது .அப்புறமா சொல்லுறண்டா விடுடா கைய.. மீனாட்சி ......இதோ வந்திற்ரன் மாமா ......மாமா என்னங்க மாமா சாப்பிடுறீங்க?...எனக்கு கொஞ்சம் தண்ணி தா பிள்ள .சரி மாமா ...அடடே ரகு வாய்யா ....எப்புடியப்பா இருக்கிற ?...ஆளே பெரியாளா வளந்திற்ற!!......நான் நல்லா இருக்குறன் தாத்தா .நீங்க எப்புடி இருக்குறீங்க தாத்தா ?...எனக்கென்னப்பா போற கட்ட ஏதொ இருக்குறன் .அது சரி.. இந்தக்  காதில தோடு ,கழுத்தில அரக்கிலோவில ஒரு  சங்கிலி, கையில நட்டுவ மேளம் அடிக்கிற ஆக்கள்மாதிரி நகை அதுகள் ஒண்டும் நீ போட மாட்டியா ?...அட போங்க தாத்தா ...வெளிநாட்டில இருக்கிறதால அதெல்லாம் போட வேணும் எண்டு அவசியம் இல்ல .நான் உங்கட பேரன் தாத்தா .ம்ம்ம் இப்ப தாண்ட நீ என்ர  பேரன் .இந்தாடா  தாத்தா உனக்காகக் கொண்டந்தது .என்ன தாத்தா இது ?...பிரிச்சுத்தான் பாரன் ...ஆஹா ...எள்ளுருண்டை !!!..தாத்தா நீ அத இன்னுமா மறக்க இல்ல ?..அத எப்புடியடா மறப்பன்?...  எள்ளுருண்டை  தந்தால்தான் என்னட்ட தேவாரம் படிக்க வருவன் எண்டு அடம் பிடிச்ச ஆள்த்தானே நீ ...போங்க தாத்தா எனக்கு இப்ப ஒரே கவலையா இருக்கு .இத்தின வருசமா நான் உங்களோட வாழக் குடுத்து வைக்க இல்லையே தாத்தா ....டேய் என்னடா இது சின்னக் குழந்தை மாதிரி அழுகுற?....!! அது ஒண்டும் இல்லத் தாத்தா ....புரியுது!....நீ என்னடா செய்வ பாவம் நம்மளோட தலை எழுத்து  இப்புடியாப் போச்சு ...கண்ணத் துடைச்சுக்கோ .ரகு ...அம்மா கூப்புடுறா போய் என்னெண்டு கேள் .
                                      ஈஸ்வரா .....இந்தக் காலம் எப்பதான் மாறுமோ !!...என்னப்பா உங்கட பேரன் என்னவாம்?...சுப்புரமணி நீ குடுத்து வச்சவன்ரா.அருமையான பிள்ளைய கடவுள் உனக்கு மகனா தந்திருக்கிறான் .கெதியில அவனுக்கொரு நல்ல பெண்ணாப் பாத்து கலியாணத்தையும் செய்து வச்சிரு .ஆமாப்பா அது விசயமா பேசத்தான் அவன இங்க வரச் சொன்னன் .நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல விசயத்த தள்ளிப் போடாத .அது சரி பொண்ணு ஆரு ?....அது வேற யாரும் இல்லயப்பா உங்கட பாலிய நண்பர் சொக்கலிங்கம் பிள்ளையின்ர பேத்தி ராணிதான் .அட அந்த இளவரசியா ?...! ஆமாப்பா ..அருமையான சோடிப் பொருத்தம் .அந்தப் பெண்ணுக்கும் இதில சம்மதம்தானே ?.......
                                                 
                                                                                  தொடரும் .....
                                         
         (  இக் கதையில் வரும் கதா பாத்திரங்களும் கதையும் கற்பனையே .)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.